வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (26/10/2017)

கடைசி தொடர்பு:20:53 (26/10/2017)

25 ஆண்டுகளில் முக்கால்வாசி பூச்சிகள் அழிந்துவிட்டன... அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி!

நம்மைச் சுற்றி உள்ள பூச்சிகள்தான் மிகவும் சிக்கலான இயற்கை உணவுச் சங்கிலியை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. இவ்வுலகில் உள்ள உயிரினங்களில் அதிக எண்ணிக்கைக் கொண்ட உயிரினங்களில் பூச்சிக்குத்தான் முதலிடம். உலகில் மொத்தமாக 80-100 மில்லியன் பூச்சிகள் இருக்கலாம். பூச்சிகள்தான் ஒரு நாட்டின் வளத்தை நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான காரணியாகும். பூச்சி இனங்களில் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என இரண்டு வகைப் பூச்சிகள் உண்டு. இப்போது மேலை நாடுகளில் பூச்சிகளை உணவாக உட்கொள்ளவும் துவங்கிவிட்டனர். ஆனால், கடந்த 25 ஆண்டுகளில் ஜெர்மனியில் முக்கால்வாசி பறக்கும் பூச்சிகள் அழிந்துவிட்டன என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இத்தகவல் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் பறக்கும் பூச்சிகள்தான் பூமியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளும். பறக்கும் பூச்சிகளால்தான் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். இப்பூச்சிகளின் அழிவு நிச்சயமாக மனிதனின் வாழ்வியலுக்குப் பேரழிவை உண்டாக்கும். இது சுற்றுச்சூழலுக்கு எதிராகக் கடுமையான தாக்கம் ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

பூச்சிகள்

"தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இப்பூச்சிகள் அழிவு விவசாயத்தைப் பெரிதளவில் பாதித்துள்ளது" என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணமாக, காட்டுப்பகுதிகள் அழிக்கப்படுவது, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவை முக்கியப் பங்கை வகித்தாலும், பூச்சிகளின் பெரும் சரிவுக்குக் காரணம் இன்னும் தெளிவாக விளங்கவில்லை. பூச்சிகள் பற்றிய ஆய்வில் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைப் பற்றி விஞ்ஞானிகள் நிரூபித்தாலும், பூச்சிக் கொல்லி அளவுகளைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. "மிகப்பெரிய பிரதேசத்தில் பூச்சிகள் எண்ணிக்கை குறைந்து வருவது நிச்சயமாகக் கவலை கொடுக்கக் கூடிய விஷயம்தான்" என்கிறார், நெதர்லாந்திலுள்ள ராப்ட்போட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹான்ஸ் டி குரோன் என்ற ஆராய்ச்சியாளர். 

சசெக்ஸ் பல்கலைக்கழக பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவ் கௌல்சன் மற்றும் குழுவின் புதிய ஆய்வுக்குப் பின்னால் 'பூச்சிகள்தான் மூன்றில் இரண்டு பங்கு உற்பத்திக்கு மூலக்காரணம். நாம் பறக்கும் பூச்சிகளால்தான் உயிர் சேமிப்பு உரங்களைக் கொண்டிருக்கிறோம். ஆனால், பூச்சிகளின் அழிவினால் விரைவில் உயிர் சமநிலையை இழக்கப் போகிறோம். நாம் பூச்சிகளை இழந்தால் இவ்வுலகில் அனைத்துமே விழ்ச்சியுறும்' எனும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் டஜன் கணக்கான நுண்ணுயிரிகள் மற்றும் பூச்சிகள் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி தொடங்கியது. 1989-ம் ஆண்டில் 1,500 க்கும் மேற்பட்ட பறக்கும் பூச்சிகளின் மாதிரிகள் கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு மாதிரிப் பூச்சியும் மொத்த எடை அளவிடப்பட்டபோது எடைகளில் திடுக்கிடும் சரிவு தென்பட்டது. 27 ஆண்டு காலப்பகுதியில் ஆண்டுக்குச் சராசரியாக 76% பூச்சிகள் வீழ்ச்சியடைந்தன. ஆனால், 82% கோடையில், பூச்சிகளின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்த போதும் அவற்றின் வளர்ச்சியில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்தன.  பூச்சிகள், பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை சமீபமாக பத்தாண்டுகளில் 50% பெரிதும் வீழ்ச்சியடைந்தன. ஆனால், புதிய ஆராய்ச்சியானது அனைத்து பறக்கும் பூச்சிகளையும் கைப்பற்றி மேற்கொண்டது. இதில் ஈக்கள் அரிதாகவே ஆய்வுசெய்யப்பட்டன. இதனால் இதன் சரிவு மிக வலுவான அடையாளமாக இருந்தது. விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்ட இடம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதுதான் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல். 

பூச்சிகளின் வகைகள்

ஒரு பூச்சி இயற்கையை விட்டு வெளியேறும்போது நிச்சயமாக அழிவைச் சந்திக்க நேரிடும். பூச்சிகள் வாழும் நிலப்பரப்பு குறைவாக இருந்தாலும் அவை இறப்பைச் சந்திக்க நேரிடும். இந்த ஆய்வின் முடிவில் பூச்சிகளின் அழிவுக்கு ரசாயன பூச்சிக் கொல்லிகளின் வெளிப்பாடு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. பூச்சிகள் இல்லா இவ்வுலகு அழிவைச் சந்திப்பது நிச்சயம். இந்தியாவிலும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்