ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு... 13 பேர் பலி! | Bomb blast in Kabul, 13 dead

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (31/10/2017)

கடைசி தொடர்பு:23:34 (31/10/2017)

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு... 13 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.

 Photo credit: Reuters

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் பகுதியில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. அந்தப் பகுதியில் இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. வெடிகுண்டை உடலில் கட்டியிருந்த நபர், ஆஸ்திரேலிய தூதரகத்தின் அருகில் வெடிக்கவைத்துள்ளார். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை.