வாகனத்தை சைக்கிள் பாதையில் செலுத்திய தீவிரவாதி: நியூயார்க்கில் 8 பேர் பலி!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் அருகில் இருக்கும் சைக்கிளுக்கான பாதையில், தீவிரவாதி ஒருவர் வாகனத்தைக்கொண்டு மோதியுள்ளார். இந்த விபத்தினால் 8 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இந்த விபத்துக்குக் காரணமான தீவிரவாதி, போலீஸாரால்  சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காயமானவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

விபத்து ஏற்படுத்து பயன்பட்ட கார்

இந்தச் சம்பவம்குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், `நியூயார்க் நகரத்தில் மிகவும் ஆபத்தான மனிதரால் இன்னொரு விபத்து ஏற்பட்டுள்ளது. சட்ட அமைப்புகள் இந்த விஷயத்தைக் கூர்ந்து கவனித்துவருகின்றன. இது அமெரிக்காவில் நடக்கக்கூடாது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை மீண்டும் முளைக்கவோ நம் நாட்டுக்குள் வரவோ அனுமதிக்கக்கூடாது. அவர்களை நாம் மத்திய கிழக்கில் வீழ்த்தியுள்ளோம். இதோடு போதும். என் எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும் இந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது. கடவுளும் இந்த நாடும் உங்களோடு இருக்கிறார்கள்' என்று அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். 

நொறுங்கிய சைக்கிள்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!