தென்கொரியாவுடன் கைகோக்கும் சீனா!

அணுசக்திக்கு எதிராகச் செயல்பட தென் கொரியாவுடன் இணைந்து செயலாற்ற உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

சீனா

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகொரியாவில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களைச் சம்பாதித்தது வடகொரியா. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாமீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், உலக நாடுகள் பலவும் வடகொரியாமீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. 

இந்நிலையில் கொரிய தீபகற்பப் பகுதியில் அணுசக்திக்கு எதிராக தென் கொரியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம் என சீனா அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தூதரகத்தின் உதவியுடன் கொரிய தீபகற்பப் பகுதிகளில் அமைதி நிலவ சீனா உதவும் என்றும் சீனா அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!