அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு... 2 பேர் பலி

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். ஒருவர் காயமடைந்துள்ளார். 


அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கடந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் மிகப்பெரிய துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடுத்த சில நாள்களில் டெக்ஸாஸ் மாகணத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இரு தினங்களுக்கு முன்னர், நியூயார்க்கில் ட்ரக் வாகனம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இன்றும் கொலராடோ மாகணத்திலுள்ள வால்மார்ட் கடையினுள் மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். அதில் இருவர் பலியாகினர். பெண் ஒரு காயமடைந்தார். எட்டுமுறைக்கும் அதிகமாக துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்டதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!