கட்டலோனியா தலைவருக்குப் பிடிவாரன்ட்: ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி | arrest warrant issued against catalonia leader by spain court

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (04/11/2017)

கடைசி தொடர்பு:18:20 (04/11/2017)

கட்டலோனியா தலைவருக்குப் பிடிவாரன்ட்: ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி

கட்டலோனியா தலைவர் பூயிக்டேமோண்ட் மீது பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது ஸ்பெயின் நீதிமன்றம்.

Carles Puigdemont

ஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை வைத்துவந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு, கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெயின் அரசாங்கம், இவர்களது கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடுகுறித்து ஸ்பெயினின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இந்த வாக்கெடுப்பில், ஸ்பெயின் அரசு காவல்துறைமூலம் முடக்க, வாக்களிக்க வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. வாக்கெடுப்பில், 90 சதவிகித கட்டலோனிய மக்கள், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்து, தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அறிவித்தது.

இந்நிலையில், தனிநாடு கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வந்த கட்டலோனியா அரசைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தப்போவதாக ஸ்பெயின் அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பைத்தொடர்ந்து கட்டலோனியா தலைவர் கார்லெஸ் பூயிக்டேமோண்ட் மீது புகார் அளித்து ஸ்பெயின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொடர்ந்து எந்த விசாரணைக்கும் பூயிக்டேமோண்ட் ஆஜராகாததால் அவர் மீது பிடிவாரன்ட் பிறப்பித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்லெஸ் பூயிக்டேமோண்ட் தற்போது ஜெர்மனி நாட்டில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.