வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (05/11/2017)

கடைசி தொடர்பு:10:52 (06/11/2017)

சவுதி அரேபியாவின் ரியாத் நகரை குறிவைத்து ஏவுகணை வீச்சு!

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தை குறிவைத்து நேற்று ஏவுகணை ஒன்று வீசப்பட்டது. இதை ரியாத் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே சவுதி அரேபியா இடைமறித்து தடுத்தது. இதனால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது.

saudi

வீசப்பட்ட ஏவுகணை பர்கான் 2-எச் ரக ஏவுகணை ஆகும். இது 800 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடியது. ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த ஏவுகணையை சவுதி அரேபியாவை குறிவைத்து ஏவி உள்ளனர். 

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8.07 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுப்படைகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஏமன் அரசுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றன. இதற்குப் பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவை ஏவுகணை மூலம் குறிவைத்துள்ளனர்.