வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (05/11/2017)

கடைசி தொடர்பு:10:37 (06/11/2017)

ஊழலை ஒழிக்க சவுதி இளவரசர் போட்ட ஸ்கெட்ச்! - இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

சவுதி அரேபியா மன்னர் முகம்மது பின் சல்மான் ஊழல் ஒழிப்புக் குழுவின் தலைவராக பதவியேற்று ஒரு சில மணிநேரங்களிலேயே 11 இளவரசர்களைக் கைதுசெய்து அதிரடி காட்டியுள்ளார். 

சவுதி
 

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் அண்மையில் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றார். சவுதியில் அரச குடும்பத்தில் உள்ள பலர் ஊழலில் ஈடுபட்டு வருவதாக சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சவுதியில் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் முகம்மது பின் சல்மான் இறங்கிவிட்டார். அதன் தொடக்கமாக இவர் தலைமையில் நேற்று ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டனர்.  மூன்று அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் என 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சவுதியின் பெரும் பணக்காரர் ஆன அல் வலீத் பின் தலாலும் இளவரசர் குறியில் இருந்து தப்பவில்லை.

அல் வலீத் பின் தலால் கைதுசெய்யப்பட்டது உலக அரங்கையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. ‘மக்களுக்கான நிதி ஊழல் என்ற பெயரில் திருடப்படுகிறது. ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பதவி பறிக்கப்படும், சொத்துக்கள் முடக்கப்படும். ஊழல் குற்றங்களால் சவுதியின் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது’ என்று சவுதி அமைச்சரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க