வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (06/11/2017)

கடைசி தொடர்பு:15:50 (06/11/2017)

நிர்மலா சீதாராமன் அருணாசலப்பிரதேசம் சென்றதுக்கு சீனா எதிர்ப்பு!

மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், அருணாசலப்பிரதேச மாநிலம் சென்றதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில், இந்தியா-சீனா எல்லை முறையாக வரையறை செய்யப்படாத நிலையில் உள்ளது. அருணாசலப்பிரதேசம் தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. இந்த விஷயத்தில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தகராறு உள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று அருணாசலப்பிரதேசம் சென்றார். அன்ஜா மாவட்டத்தில், சீன எல்லையில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை அவர் பார்வையிட்டார்.

நிர்மலா சீதாராமனின் இந்தப் பயணத்துக்கு, சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித்தொடர்பாளர் ஹுவா சங்யிங் இதுபற்றி கூறும்போது, “அந்தப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைத் தகராறு உள்ளது. பிரச்னைக்குரிய பகுதிக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் சென்றிருப்பது அங்கு அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ உதவாது” என்றார்.