தென்கொரியாவில் ட்ரம்ப்: ஆத்திரத்தில் வடகொரியா | north korea is triggered by the presence of Trump at south korea

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (07/11/2017)

கடைசி தொடர்பு:19:15 (07/11/2017)

தென்கொரியாவில் ட்ரம்ப்: ஆத்திரத்தில் வடகொரியா

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தென்கொரியா வந்திருப்பது வடகொரியாவுக்கு மேலும் கோபத்தை அதிகரித்துள்ளதாக உலக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ட்ரம்ப்

கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர்  மூளும் வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன. ஒரு கட்டத்தில், ’அமெரிக்கா போரை அறிவித்துவிட்டது, அதனால், நாங்களும் தாக்குதலுக்குத் தயார்’ என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அமெரிக்கா, நாங்கள் எந்த நாட்டின்மீதும் போர் அறிவிக்கவில்லை என மறுத்தது. உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டுவருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை முதலியவற்றை சோதனைசெய்து, உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது வடகொரியா. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியுடன் நவம்பர் மாதத் தொடக்கத்தில், ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, வடகொரியாவுக்கு எதிராக ஆசிய நாடுகளை ஒன்றிணைக்க ட்ரம்ப் திட்டம் வகுத்துள்ளதாகக் கூறப்பட்டது. அதன்படி தற்போது அதிபர் ட்ரம்ப் தென் கொரியா வந்துள்ளது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை அதிகமூட்டியுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. 


[X] Close

[X] Close