ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் மேரி கோம்! | Mary Kom won gold in Asian Boxing Championship

வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (08/11/2017)

கடைசி தொடர்பு:14:50 (08/11/2017)

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் மேரி கோம்!

ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

மேரி கோம்


ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டி, வியட்நாமின் ஹோ சி மின் நகரில் நடைபெற்றது. 48 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீராங்கனை மேரி கோம், இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார். இறுதிப் போட்டி, இன்று நடைபெற்றது. மேரி கோமும் தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஹயாங் மியும் மோதினார்கள். எதிராளிக்கு வாய்ப்பே வழங்காத மேரி கோம், 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

குத்துச் சண்டை போட்டியில் மேரி கோம் பதக்கம் வெல்வது, சுமார் ஓர் ஆண்டுக்குப் பிறகு இது முதல் முறையாகும். இத்துடன், ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன், அவர் வென்ற 4 தங்கப்பதக்கங்களும் 51 கிலோ எடைப் பிரிவில் பெற்றது. 48 கிலோ பிரிவுக்கு மாறிய பின்னர்,  ஆசியப் போட்டியில் மேரி கோம் வென்ற முதல் தங்கம் இது.  மேரி கோம், 5 முறை உலகச் சாம்பியன் பட்டத்தையும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.