வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (09/11/2017)

கடைசி தொடர்பு:16:25 (09/11/2017)

சீனாவிலிருந்து ஒரு ட்விட்: தடையைத் தகர்த்து கெத்து காட்டிய ட்ரம்ப்!

சீனாவில் உள்ள ட்விட்டர் பயன்பாட்டுத் தடையை மீறி அங்கு சுற்றுப்பயணம் சென்ற ட்ரம்ப், ஒரு ட்விட் தட்டிவிட்டு அசத்தியுள்ளார்.

சீனாவில் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது மனைவி மெலானியா உடன் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். சமீபத்தில், ட்ரம்ப் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தென்கொரியா சென்றார். இந்தப் பயணம், வடகொரியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியிலும் பதற்றத்தை அதிகப்படுத்தியது. 

இந்த வகையில், ட்ரம்ப் தற்போது சீனாவில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்துவருகிறார். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு சீனாவில் ட்விட்டர் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களை உபயோகப்படுத்தத் தடை உள்ளது.  அந்தத் தடையை மீறி, சீனாவிலிருந்து ட்ரம்ப் சரமாரியாகத் தொடர்ந்து வெளியிட்டுவந்த ட்விட்ஸ் தற்போது, ‘டாக் ஆஃப் தி வேர்ல்டு’ ஆக உள்ளது. தடையை எதிர்த்து ட்ரம்ப் ட்விட் செய்திருப்பதற்கு, சீனாவின் பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். 

சீனாவில், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றினால் சிறைத்தண்டனை வழங்கப்படும்.  அந்த அளவுக்கு சட்டம் கடுமையாக உள்ளது. ஆனால் ட்ரம்ப், 'ட்விட்டரில் தன்னைப் பின் தொடரும் கோடிக்கணக்கான பயனாளர்களுக்காக ட்விட் செய்தார்’ என்று அமெரிக்க தரப்பும், “நாட்டின் விதிமுறை என்றாலும் உலகத் தலைவர்களைக் கருத்தில்கொள்ளுதல் அவசியம்” என சீனாவின் தரப்பிலிருந்தும் கூறப்பட்டுள்ளது.