பிரிட்டனின் இந்திய வம்சாவளி பெண் அமைச்சர் ராஜினாமா! | UK Minister priti patel resign

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (09/11/2017)

கடைசி தொடர்பு:17:20 (09/11/2017)

பிரிட்டனின் இந்திய வம்சாவளி பெண் அமைச்சர் ராஜினாமா!

பிரிட்டன்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி படேல், பிரிட்டன் நாட்டில் சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசியல் அழுத்தங்கள் காரணமாக பிரீத்தி படேல் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிகின்றன. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சென்ற ஆண்டு,  நவம்பர் 8-ம் நாள் அமலுக்குக் கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து, பிரீத்தி படேல். 'பல தரப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோதும், நரேந்திர மோடியின் இந்த முடிவு, சட்ட விரோதச் செயல்பாடுகள் மற்றும் வர்த்தகங்களுக்கு எதிரான நடவடிக்கை' எனப் பாராட்டியிருந்தார்.  

கடந்த பத்து நாள்களில் பிரிட்டன் அமைச்சரவையைச் சேர்ந்த இரண்டாம் நபர் ராஜினாமா செய்கிறார். கடந்த வாரம் புதன் கிழமை அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் பலோன் தனது பதவிலிருந்து விலகினார். அவர் பெண் நிருபரிடம் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்ற பிரச்னைக்காக மன்னிப்புக் கேட்டதுடன் பதவியை ராஜினாமாவும் செய்தார்.