வெளியிடப்பட்ட நேரம்: 01:52 (10/11/2017)

கடைசி தொடர்பு:08:21 (10/11/2017)

உங்கள் பாலினத்தை நீங்களே தேர்வு செய்யலாம்!

லகம் முழுவதும் திருநர்களுடைய பாலின அங்கீகரிப்பு நோக்கிய போராட்டங்களின் மைல் கல்லாக ஸ்காட்லாந்து அரசாங்கம் ஒரு முடிவை எடுத்திருக்கிறது. சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அவர்களுடைய பாலினத்தை அவர்களே தேர்வுசெய்யும் தெரிவினை கொடுக்க முடிவு செய்திருக்கிறது. ஆண் பால் பெண் பால் மட்டுமல்லாமல், பாலற்றவர்கள் (non-binary) என்கிற தெரிவுகளை, எந்த ஒரு மருத்துவ ஆவணமும் இல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கூட மாற்றிக்கொள்ளலாம்.

பாலினத்தை மாற்றுவதற்கு குறைந்தபட்ச வயதினை 16 என்று வரையறுக்கலாம் என்றும், அல்லது பருவமடைந்தவர்கள் மாற்றிக்கொள்ளலாம் என்றும் வரையறுக்கலாம் என்றும் வரைவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை, பொதுக் கழிவறைகள் என்று அனைத்து இடங்களிலும் பாலற்றதாய் மாற்றவும் பரிந்துரைகள் தெரிவிக்கின்றன. பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமத்திலும் பாலற்றவர் என்ற தெரிவை வைக்க பிரிட்டனிடமிருந்து அனுமதிபெற வேண்டும் என்பதையும் அந்த ஆவணம் குறிப்பிட்டுள்ளது.