பிரீத்தி படேலுக்குப் பதில் பிரிட்டனின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற பெண் இவர்தான்!

பிரிட்டன்

பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப் பெண்மணியான பிரீத்தி படேல் பதவி வகித்துவந்தார். ஆனால், கடந்த புதன் கிழமையன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். பிரீத்தி படேல் கடந்த மாதம் இஸ்ரேலுக்குப் பயணம் சென்றிருந்தார். அப்போது அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட சிலரைச் சந்தித்தார். இதுகுறித்து, பல தரப்புகளிலிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தது. இதனால் அரசியல் அழுத்தங்கள் அதிகமாகி, பிரீத்தி படேல் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் தெரெசா மே வும் பிரீத்தியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

இந்த நிலையில் பிரிட்டனின் அடுத்த சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராக யார் நியமிக்கப்படப்போகிறார் என்பது ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது பென்னி மோர்டான்ட் (Penny Mordaunt) என்பவர் அந்த அமைச்சர் பதவிக்குப் பொறுப்பேற்றிருக்கிறார். இவர் வகித்த வந்த மாற்றுத் திறனாளிக்கான வளர்ச்சித் துறையிலிருந்து இந்தப் பொறுப்புக்கு மாற்றப்பட்டிருக்கிறார். 

சென்ற வாரத்தில் பிரிட்டனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் பலோன்மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், தனது செயலுக்கு மன்னிப்பையும் கேட்டிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!