'இனி சிகரெட்டுக்கு நோ!': போப் ஆண்டவர் புதிய கட்டளை

வாட்டிகன் நகரில் சிகரெட்டுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார், போப் ஆண்டவர்.

போப்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிதத் தலமாகத் திகழும் நகரம், வாட்டிகன். இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாட்டிகனில், போப் ஆண்டவரே தலைமை ஆளுமையாக உள்ளார். மத வழிபாட்டு நகரமாகவும், சுற்றுலா நகரகமாகவும் திகழும் வாடிகன் நகரில், சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை போப் ஆண்டவரே நேரடியாகப் பிறப்பித்துள்ளார். இதுகுறித்து போப் ஆண்டவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புனித நகரமான வாட்டிகனில், மக்களின் உடல்நலம் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று அறிவித்துள்ளார். போப் ஆண்டவரின் இந்த அறிவிப்பால், வாட்டிகன் நகரத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.72 கோடி நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்த மதிப்பீட்டை, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் வெளியிட்டுள்ளது.

சிகரெட் மூலம் லாபம் இல்லையென்றாலும், வாட்டிகன் நகர மக்களுக்கும் அங்கு வருவோருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே, இந்த அறிவிப்பு என்கிறது வாட்டிகன் நகரம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!