’வடகொரியாவுக்கு எதிராக ஒன்றிணைவோம்’: ட்ரம்ப் அழைப்பு | Trump's invitation to gather together against North korea

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (11/11/2017)

கடைசி தொடர்பு:10:55 (11/11/2017)

’வடகொரியாவுக்கு எதிராக ஒன்றிணைவோம்’: ட்ரம்ப் அழைப்பு

'வடகொரியாவுக்கு எதிராக பிராந்திய நாடுகள் ஒன்று திரள வேண்டும்' என அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

ட்ரம்ப்

கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர்  மூளும் வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன. ஒரு கட்டத்தில், ’அமெரிக்கா போரை அறிவித்தது. அதனால், நாங்களும் தாக்குதலுக்குத் தயார்’ என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அமெரிக்கா, 'நாங்கள் எந்த நாட்டின்மீதும் போர் அறிவிக்கவில்லை' என மறுத்தது. 

உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டுவருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளைச் சோதனைசெய்து, உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது வடகொரியா. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியுடன் நவம்பர் மாதத் தொடக்கத்தில், ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, வடகொரியாவுக்கு எதிராக ஆசிய நாடுகளை ஒன்றிணைக்க ட்ரம்ப் திட்டம் வகுத்துள்ளதாகக் கூறப்பட்டது. அந்த வகையில் நேற்று வியட்நாம் சென்ற ட்ரம்ப், அங்கு நடந்த ’ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றம்’ சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.

அங்கு அவர் கூறுகையில், “வடகொரியாவுக்கு எதிராக அனைத்து ஆசிய பசிபிக் பிராந்தியங்களும் ஒன்றிணைய வேண்டும். வரும் காலங்களில் ஆசிய பசிபிக் நாடுகளுடன் இணைந்து வர்த்தகங்களிலும் ஈடுபடத் தயார்” என ட்ரம்ப் கூறினார்.