மூன்று நிமிடங்களில் 10,000 கோடி! - இது அலிபாபாவின் ’சிங்கிள்ஸ் டே’ சாதனை | Alibaba sales surge Rs.10,000 crore in first 3 minutes on Singles Day

வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (11/11/2017)

கடைசி தொடர்பு:14:19 (11/11/2017)

மூன்று நிமிடங்களில் 10,000 கோடி! - இது அலிபாபாவின் ’சிங்கிள்ஸ் டே’ சாதனை

உலகின் முன்னணி சீன ஆன்லைன் வர்த்தக நிறுவனமான 'அலிபாபா', மூன்று நிமிடங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் (1.51 பில்லியன் டாலர்) மதிப்பிலான பொருள்களை விற்று சாதனை படைத்துள்ளது.

jack ma

ஒவ்வோர் ஆண்டும் அலிபாபா நிறுவனம், ’சிங்கிள்ஸ் டே’ என்னும் மெகா ஆன்லைன் தள்ளுபடி விற்பனையை அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டு, ’சிங்கிள்ஸ் டே’ விற்பனை நேற்று தொடங்கியது. விற்பனை தொடங்கிய முதல் 3 நிமிடங்களில் 10,000 கோடி மதிப்பிலான பொருள்கள் விற்பனை ஆகியுள்ளன. அதில், 97 சதவிகித வாடிக்கையாளர்கள் மொபைல் மூலமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.   

’சிங்கிள்ஸ் டே’ என்பது, சீனாவில் திருமணமாகாமல் சிங்கிள்ஸ் ஆக உலா வரும் இளைஞர் இளைஞிகள், தங்கள் வாழ்க்கை முறையைக் கொண்டாடும் ஜாலி டே. ஒவ்வோர் ஆண்டும் 11/11 அதாவது, நவம்பர் 11-ம் தேதி, சிங்கிள்ஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக்கும் முயற்சியில், கடந்த 2009-ம் ஆண்டு அலிபாபா நிறுவனர் ஜேக் மா ’சிங்கிள்ஸ் டே சேல்’ என்னும் தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்தினார். ஒவ்வோர் ஆண்டும் இந்த தினத்தில் கோடிகளை அள்ளும் அலிபாபா  நிறுவனம், இந்த முறை முதல் 15 நிமிடங்களிலேயே சுமார் 32,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்று, கோடிகளை அள்ளியுள்ளது.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க