வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (12/11/2017)

கடைசி தொடர்பு:13:15 (12/11/2017)

பிலிப்பைன்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற உள்ள ஏசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார்.

மோடி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வருகிற 14-ம் தேதி 25-வது இந்தியா - ஏசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை பிலிப்பைன்ஸ் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிலிப்பைன்ஸ் செல்லும் மோடி அங்கு நடைபெற உள்ள ஏசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளார். மேலும் பல நாட்டு முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகள் உடனான இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மோடி பேசவுள்ளார். சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் செல்ல உள்ளார். இதற்கு முன்னர் இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகித்தக் காலத்தில் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.