இரான் - இராக் எல்லையில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம்! | A 7.2 magnitude earthquake has struck the semi-autonomous Kurdish region of northern Iraq

வெளியிடப்பட்ட நேரம்: 02:11 (13/11/2017)

கடைசி தொடர்பு:11:41 (13/11/2017)

இரான் - இராக் எல்லையில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம்!

இரான் - இராக் எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், கத்தார் வரை உணரப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வரைபடம்

இராக் பகுதியில் இருக்கும் குர்தீஷ் அரசால் நிர்வகிக்கப்படும் சுலைமணியா நகரத்தில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுலைமணியாவின் தென்கிழக்குப் பகுதியில், உள்ளூர் நேரப்படி 9.18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள்குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவல்களும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், இதுவரை 6 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறிவருகின்றன. இதனால், இராக்கில் பரவலாக மின்சாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.