ஈரான் - ஈராக் எல்லையில் நிலநடுக்கம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | earthquake at iran-iraq border: death rate is increasing

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (13/11/2017)

கடைசி தொடர்பு:11:53 (13/11/2017)

ஈரான் - ஈராக் எல்லையில் நிலநடுக்கம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ஈரான் - ஈராக் எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 135 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈராக்

 ஈராக் பகுதியில் இருக்கும் குர்தீஷ் அரசால் நிர்வகிக்கப்படும் சுலைமணியா நகரத்தில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுலைமணியாவின் தென்கிழக்குப் பகுதியில், உள்ளூர் நேரப்படி 9.18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், இருநாட்டு எல்லையில் கடும் அதிர்வலைகள் எழுந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால், இரு நாட்டு எல்லையில் உள்ள சுமார் 135 பேர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கியே பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து தவித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதால், பாதிப்படைந்தவர்கள்குறித்த விவரங்களை அதிகாரபூர்வமாக இரு நாட்டு அரசாலும் அறிவிக்க முடியவில்லை. இரு நாட்டின் அவசரப் பாதுகாப்புப் பிரிவினர், பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணியை விரைவாக நடத்தி வருகின்றனர்.