வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (13/11/2017)

கடைசி தொடர்பு:15:48 (13/11/2017)

வட அமெரிக்கா அருகே வலிமையான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவு

வட அமெரிக்கா அருகிலுள்ள கோஸ்டாரிகா பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

வட அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரபலமான தீவு கோஸ்டாரிகா. முக்கிய சுற்றுலாத் தலமான இந்தத் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கோஸ்டாரிகாவின் தலைநகரான சான்ஜோஸ் நகரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும், முக்கிய சுற்றுலா நகரமான ஜகோ பகுதியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனபோதிலும் பாதிப்புகள், பாதிக்கப்பட்டோர் ஆகியவை குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோஸ்டாரிகாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான பனாமா, நிகாரகுவா போன்ற நாடுகளையும் தாக்கியுள்ளது. இதனால் நிலநடுக்கம் பாதித்த நாடுகளில் மின்சாரம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் சிக்னல்களும் தடைபட்டதால் தகவல் தொடர்பும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.