ஆறு நாட்டுப் பயணிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

ட்ரம்ப்

இஸ்லாமியப் பெரும்பான்மைகொண்ட 6 நாடுகளிலிருந்து அமெரிக்க குடியேற்றத்தைத் தடைசெய்து, புதிய குடியேற்ற உத்தரவில் பதவியேற்ற சில நாள்களிலேயே கையெழுத்திட்டிருந்தார், டொனால்ட் ட்ரம்ப். ஏமன், சிரியா, இரான், சூடான், லிபியா, சோமாலியா ஆகிய ஆறு நாடுகளில், அரசு ஆதரிக்கும் தீவிரவாதம் ஓங்கியிருப்பதால், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு அடுத்த 90 நாள்களுக்கு யாரும் குடியேற முடியாது என்று இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவில் தகுந்த விசா அனுமதியோடு குடியிருப்பவர்கள் மற்றும் க்ரீன் கார்டு ஹோல்டர்களுக்கு விதி விலக்களிக்கப்பட்டது. 

இந்த உத்தரவு, மார்ச் 16-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கடந்த ஜனவரியிலும், மார்ச் மாதத்திலும் ஒரு உத்தரவை, கால அவகாசம் தராமல் உடனடியாக ட்ரம்ப் அமல்படுத்த உத்தரவிட்டார். பலவித குழப்பங்களை ஏற்படுத்திய இந்த உத்தரவுக்கு, கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது.  அதனால் இந்த உத்தரவுக்கு தற்காலிகத் தடை விதிப்பதாக அமெரிக்காவின் கீழ் நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்புதான் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!