கோழியைப் பாலியல் கொடுமை செய்த சிறுவன் கைது!

பாகிஸ்தானில் கோழிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை போலீஸ் கைது செய்துள்ள விசித்திரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

chicken
 

இஸ்லாமாபாத்தில் ஜலல்பூர் பட்டியான் அருகே உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனக்குச் சொந்தமான கோழியை 14 வயது சிறுவன் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து பின்னர் கொன்றுவிட்டதாக ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்தியதில் அச்சிறுவன் கோழிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொன்றது உண்மையென்று தெரியவந்துள்ளது.  

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் The Express Tribune என்னும் பாகிஸ்தான் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ``கோழியை மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தோம். அச்சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மைதான். பாலியல் விரக்திக்கு (’sexual frustration’) ஆளான அச்சிறுவன் இந்தக் காரியத்தைச் செய்துள்ளான். மனரீதியாகப் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறான். ’இயற்கைக்கு மாறான குற்றம்’ புரிந்த பிரிவின் கீழ் சிறுவன்மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்துள்ளோம். கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!