அமெரிக்காவில் கெத்து காட்டும் இந்திய நிறுவனங்கள்! ஒரு லட்சம் பேருக்கு வேலை

அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்கள், அந்நாட்டு பொருளாதாரத்துக்குப் பங்களித்திருப்பது மட்டும் அல்லாமல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை  உருவாக்கியுள்ளன.

இன்போசிஸ்


டாட்டா குழுமம், இன்போசிஸ் உள்ளிட்ட  இந்திய நிறுவனங்கள், அமெரிக்காவில் தங்கள் நிறுவனக் கிளைகளை அமைத்துள்ளன. இதே போன்ற 100 இந்திய நிறுவனங்கள், அமெரிக்கா மற்றும் பியூயர்டோ ரிகோவில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன. அதோடு, இந்நிறுவனங்கள்மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் 1,800 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நியூ ஜெர்சி (8,572), டெக்ஸாஸ் (7,271), கலிஃபோர்னியா (6,749), நியூயார்க் (5,135), ஜார்ஜியா (4,554) ஆகிய மாகாணங்களில், இந்திய நிறுவனங்கள்மூலம் அதிக அளவில் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. 87 சதவிகித நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில்  கூடுதல் அமெரிக்கர்களை பணியமர்த்த முடிவுசெய்துள்ளன. 

தொழில் முதலீடு தவிர  இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் 14.7 கோடி டாலரை சமூக நலப்பணிகளுக்கும், 58.8 கோடி டாலரை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் செலவிட்டுள்ளன. இந்திய தொழில் கூட்டமைப்பு வெளியிட்ட “அமெரிக்க மண்ணில், இந்திய வேர்கள்” என்னும் அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!