கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் நீக்கம்! | UC Browser was temporarily removed from play store

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (15/11/2017)

கடைசி தொடர்பு:17:10 (15/11/2017)

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் நீக்கம்!

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. 

யூசி பிரவுசர்


மொபைல் பிரவுசர்களில் மிகவும் பிரபலமானது யூசி பிரவுசர். இது வேகமாகச் செயல்படும் என்பதால் பெரும்பாலான  ஸ்மார்ட்போன்களில் தவறாமல் இது இடம்பிடித்துவிடும். உலகின் முன்னணி சீன ஆன்லைன் வர்த்தக நிறுவனமான 'அலிபாபா' இதன் உரிமையாளராக இருந்து வந்தது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 500 மில்லியன் முறை தரவிறக்கம் செய்யப்பட்டதாகச் சமீபத்தில் யூசி பிரவுசர் அறிவித்திருந்தது.

இந்நிலையில் யூசி பிரவுசர் பயனர்களின் தகவல்களைச் சேகரித்து சீனாவில் உள்ள சர்வர்களுக்கு அனுப்புவதாகச் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து யூசி பிரவுசரிடம் விளக்கம் கேட்டது இந்திய அரசு. அப்பொழுதே யூசி பிரவுசர் இந்தியாவில் தடை செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எந்தவித அறிவிப்புமின்றி ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது யூசி பிரவுசர். அதே வேளையில் அதன் மற்றொரு வெர்ஷனான யூசி பிரவுசர் மினி நீக்கப்படவில்லை. இது பற்றி அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர் கூறும்போது, 'இன்னும் 30 நாள்களுக்கு யூசி பிரவுசருக்கு ப்ளே ஸ்டோரில் தடை இருக்கும்' என்றார். தரவிறக்கத்தை அதிகரிப்பதற்காகத் தவறான வழியில் செயல்பட்டதே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் நீக்கத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.