வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (17/11/2017)

கடைசி தொடர்பு:09:40 (17/11/2017)

அணு ஆயுத விவகாரம்: வடகொரியாவுடன் சீனா பேச்சுவார்த்தை

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, சீனா தயாராகி உள்ளது.

வடகொரியா

கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர்  மூளும் வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன. ஒரு கட்டத்தில், ’அமெரிக்கா போரை அறிவித்தது. அதனால், நாங்களும் தாக்குதலுக்குத் தயார்’ என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அமெரிக்கா, 'நாங்கள் எந்த நாட்டின்மீதும் போர் அறிவிக்கவில்லை' என மறுத்தது. 

உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டுவருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளைச் சோதனைசெய்து, உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது வடகொரியா. 

இந்நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் சர்வதேச தொடர்புத் துறையின் தலைவர் சாங் டாவ், இன்று வடகொரியா செல்கிறார். சீனாவின் பிரதிநிதியாகச் செல்லும் சாங் டாவ், வடகொரியாவில் இன்று மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையின்மூலம் வடகொரியா விவகாரத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தும் என சீனப் பத்திரிகைகள் கருத்து தெரிவித்துவருகின்றன.