ஈராக்கில் ஐ.எஸ் ஆதிக்கம் முடிந்தது! கடைசி நகரையும் கைப்பற்றியது ராணுவம்

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான ராவாவையும் ஈராக் ராணுவம் இன்று கைப்பற்றியது. இத்துடன் ஈராக்கில் ஐ.எஸ். ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

ஐ.எஸ்


ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் சில குறிப்பிட்ட பகுதிகளைக் கைப்பற்றி தனிநாடாக அறிவித்திருந்தனர். இதை மீட்கும் முயற்சியில் அரசுப்படைகள் ஈடுபட்டு வந்தன. அவர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் படைகள் ஆதரவு அளித்து வந்தன. 
ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக ஈராக் ராணுவம் மீட்டு வந்தது. அந்த வகையில் ஐ.எஸ்  அமைப்பின் முக்கிய நகரமாகச் செயல்பட்டு வந்த மொசூல் நகரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக் படைகள் கைப்பற்றின. அதன்பின்னர் சிரியா எல்லை அருகே அமைந்து ராவா நகரம் மட்டும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக இன்று ஈராக் ராணுவம் அறிவித்துள்ளது. ராவா நகரில் உள்ள அரசு அலுவலகங்கள், கட்டடங்களில் ஈராக் கொடியைப் பறக்கவிட்டதாக அந்நாட்டு ராணுவம்  கூறியுள்ளது. ஆக, இத்துடன் ஈராக்கில் ஐ.எஸ் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. ,இந்தச் செய்தியை ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!