'வடகொரியா தீவிரவாதத்தை ஆதரிக்கிறது!' : குற்றம் சுமத்தும் ட்ரம்ப் | Trump complains over North Korea

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (21/11/2017)

கடைசி தொடர்பு:18:35 (21/11/2017)

'வடகொரியா தீவிரவாதத்தை ஆதரிக்கிறது!' : குற்றம் சுமத்தும் ட்ரம்ப்

”வடகொரியா தீவிரவாதத்தை ஆதரிக்கிறது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ட்ரம்ப்

கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன. ஒரு கட்டத்தில், `அமெரிக்கா போரை அறிவித்தது. அதனால், நாங்களும் தாக்குதலுக்குத் தயார்’ என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அமெரிக்கா, 'நாங்கள் எந்த நாட்டின்மீதும் போர் அறிவிக்கவில்லை' என மறுத்தது. 

உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டுவருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளைச் சோதனைசெய்து, உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது வடகொரியா. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் “வடகொரியா தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது” எனக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. மேலும் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்துவரும் வடகொரியா, ஈரான், சிரியா, சூடான் ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டு தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டு வருகிறது” என்றார்.