வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (22/11/2017)

கடைசி தொடர்பு:16:41 (22/11/2017)

5.7 கோடி பேரின் தகவல் திருட்டு!- வாடிக்கையாளர்களை மிரளவைத்த உபேர்

உபேர் கால் டாக்சி நிறுவன வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

உபேர்
 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த மிகப்பெரிய ஹேக்கிங் நிகழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள உபேர் வாடிக்கையாளர்கள்   மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட 5.7 கோடி பேரின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருடப்பட்டுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட உபேர் ஓட்டுநர்களின் லைசென்ஸ் எண் உள்ளிட்ட விவரங்களும் திருடப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைக் கடந்த ஓராண்டாக உபேரின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஜோ சல்லிவன்  மற்றும் அவரின் உதவியாளர்கள் மூடி மறைத்துள்ளனர். திருடப்பட்ட விவரங்களை டெலீட் செய்ய ஹேக்கர்ஸிடம் பேரம் பேசியுள்ளனர்.

இந்தத் தகவல் ஒரு வருடத்துக்குப் பிறகு, தற்போது உபேர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குட் தெரிய வந்துள்ளது. தகவல்கள் திருடப்பட்டது பற்றி நிறுவன உயர்மட்டக் குழுவுக்குத் தகவல் அளிக்காதக் குற்றத்துக்காக ஜோ சல்லிவன் மற்றும் அவரின் உதவியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது உபேர். இந்தத் தகவல்களை உபேர் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்துக்கு (bloomberg ) பேட்டியளித்துள்ளார். ``கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உபேர் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது உண்மைதான். ஆனால், அதனால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் விவரங்கள் திருடப்படவில்லை. வாடிக்கையாளர்கள் பயப்படத் தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க