வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (22/11/2017)

கடைசி தொடர்பு:19:25 (22/11/2017)

வடகொரியாவுடன் தொடர்புடையவர்களைக் குறிவைக்கும் அமெரிக்கா!

வடகொரியா - அமெரிக்கா இடையே இருக்கும் புகைச்சல் உலகறிந்த ஒன்றுதான். அமெரிக்கா மற்றும் ஐ.நா உள்ளிட்ட அமைப்புகளுக்கு பணியாமல் தொடர்ந்து முரண்டுபிடித்து வருகிறது வடகொரியா. அதேநேரத்தில், எப்படியாவது வடகொரியாவுக்கு கிடுக்குப்பிடி போட்டு கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று அமெரிக்காவும் முயன்று வருகிறது. இதையொட்டி இன்று அமெரிக்கா, வட கொரியாவுடன் வர்த்தகத் தொடர்பில் இருக்கும் அமைப்புகளுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டுக்கு மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. 

ட்ரம்ப்

வடகொரியாவுடன் வர்த்தகத் தொடர்பிலிருந்த 13 கம்பெனிகளுக்கு பல கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தரப்பு, `இந்த நடவடிக்கை வடகொரியா மீதும் அதனுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும். இதன் மூலம், வடகொரியாவைத் தனிமைபடுத்தும் நடவடிக்கை மேலும் தீவிரமடையும்' என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவும் அதைச் சோதனை செய்யவும் வடகொரியாவுக்கு நிதி கிடைக்காது என்று அமெரிக்க தரப்பு நம்புகிறது.