வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (26/11/2017)

கடைசி தொடர்பு:17:40 (26/11/2017)

சூரியனில் விழுந்தது ஓட்டை!- நாசா புகைப்படத்தால் அதிர்ச்சியில் புவியியலாளர்கள்

சூரியனில் விழுந்துள்ள ஒரு ஓட்டையால் பூமிக்கு ஏதும் ஆபத்து நிகழுமா என புவியியலாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நாசா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படத்தால் சர்வதேச சூழலியளாலர்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாசா

கடந்த வாரம் நாசா வெளியிட்டுள்ள சூரியனின் புகைப்படம் தற்போது சர்வதேச விவாதமாகி உள்ளது. நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சூரிய மண்டலத்தில் ஓட்டை விழுந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரிய மண்டலத்தில் விழுந்துள்ள ஓட்டையால் சூரியக் காற்ற அதிகளவில் வெளியாகி வருவதாகவும், இதனால் பூமி பந்துக்கு வெப்பக் காற்று அதிகளவில் பரவி வருவதாகவும் விளக்கியுள்ளது.

மேலும் இந்தக் கடுமையான சூரியக்காற்றால் பூமியில் இருந்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் பலவும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் பூமியில் உள்ள சோலார் மின் சக்திக் கருவிகள் இந்த வெப்பக் காற்றால் பாதிக்கப்படும் என்றும் நாசா அறிவியல் ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூரியனின் வெளிமண்டலத்தில் ஏற்படும் காந்த புல இயக்கம் காரணமாக ‘கரோனா’ என்றழைக்கப்படும் இதுபோல் ஓட்டைகள் விழுவது வழக்கமானது தான் என்றாலும் தற்போது அதிகளவில் வெளியாகி வரும் சூரியக் காற்றே பூமிக்கு ஆபத்தாகி உள்ளது.