வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (27/11/2017)

கடைசி தொடர்பு:17:24 (27/11/2017)

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி அளிப்பது எப்படி?

ஹார்வர்டு

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகத் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்கா வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சியில் இறங்கி, நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், நிதிப் பற்றாக்குறை நிலவிவந்தது. இந்நிலையில், தமிழக அரசு 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாகத் தர ஒப்புக்கொண்டது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்பட்டதால், பல சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக ஆசிரியர் சங்கம் ஆகியவை தொடர்ந்து நிதியுதவி வழங்கியும் சேகரித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தொடர் செய்திகள் வெளியாகி வரும் வேளையில், தமிழ் இருக்கைக்காக நிதியுதவி வழங்க விரும்புபவர்களுக்காக, தமிழ் இருக்கைக்காக, தனி ஒரு நபராக முதன்முதலாக 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் விளக்கமளிக்கிறார்.

பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் கூறுகையில், “அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய விரும்பும் ஒவ்வொரு தனி நபரும் நிதியுதவி அளிக்கலாம். இதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் மூன்று வழிமுறைகளை அளித்துள்ளது. முதலாவதாக, செக் வழியாக நன்கொடை அளிக்கலாம். செக் கொடுக்க விரும்புபவர்கள் Payable to, President and Fellows of Harvard college என்ற பெயருக்கு செக் எடுத்து Office of the Recording secretary, Harvard University, 124 Mount Auburn Street, Cambridge, MA 02138 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த விரும்புவர்கள் டோட் க்ரோனே என்ற அலுவலருக்கு (617) 495-3451 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். அல்லது, கேத்ரீன் இவான்ஸ் என்பவருக்கு (617) 496-8718 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

இந்த இரண்டு வழிமுறைகளையும் விட இந்த மூன்றாவது வழிமுறை மிகவும் வசதியானதாகவும், எளிமையானதாகவும் இருக்கும். அதாவது ஆன்லைன் மூலம் தமிழ் இருக்கைக்கான நிதியுதவியை நாம் அளிக்கலாம். அதற்கான விவரங்கள்:

Bank of America, 100 Federal Street, Boston, MA 02110
President and Fellows of Harvard College, RSO account
Account# : 9429263621
ACH ABA : 011000138
Wire ABA: 026009593
Swift Code : BOFAUS3N
Donor : அனுப்புநர் பெயர்
Purpose: Sangam Professorship in Tamil

மேற்கண்ட விவரங்களைப் பூர்த்தி செய்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான நிதியுதவியை அளிக்கலாம். நீங்கள் பணம் அளித்ததற்கான சாட்சியாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து நீங்கள் குறிப்பிடும் விலாசத்துக்கு ரசீது அனுப்பப்படும். வங்கியின் மூலமாகப் பணம் அனுப்புபவர்கள், வங்கி சர்வீஸ் சார்ஜ் பணத்தை தங்களது வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்பதைக் குறிப்பிடுவது அவசியம். இல்லையேல் நீங்கள் அனுப்பும் தொகையிலிருந்து சர்வீஸ் சார்ஜ் கழித்துக்கொள்ளப்படும்” என்று விளக்கினார்.