இந்தியா வந்தடைந்தார் இவான்கா ட்ரம்ப் ! - நிஜாம் அரண்மனையில் தயாராகும் இரவு விருந்து

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகளும் ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப் நேற்று நள்ளிரவு இந்தியா வந்தடைந்தார். 

 


தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், இன்று சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாடு (Global Entrepreneurship Summit) தொடங்கவிருக்கிறது. இந்த மாநாட்டில், அமெரிக்கா சார்பில் இவான்கா ட்ரம்ப் கலந்துகொள்ளவிருக்கிறார். அமெரிக்க தொழில்முனைவோர் குழுவைத் தலைமையேற்று இந்தியாவுக்கு அழைத்துவந்திருக்கிறார், இவான்கா ட்ரம்ப். அவரது வருகையையொட்டி ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு எனப் பல வகையிலும் தயார்படுத்தப்பட்டுள்ளது.

falaknuma

Falaknuma Palace

நேற்று நள்ளிரவு, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த இவான்காவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு, ஹைதராபாத்தின்  ’ஃபலக்னுமா பேலஸ்’ (Falaknuma Palace) என்று அழைக்கப்படும் நிஜாம் அரண்மனையில் இன்று இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தில், மோடியும் கலந்துகொள்கிறார். 
 

ivanka
 

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தபோது, சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள இவான்காவுக்கு அழைப்புவிடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற இவான்கா, தற்போது இந்தியா வந்துள்ளார். இந்த மாநாட்டில் சுமார் 127 நாடுகளைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர்கள் கலந்துகொள்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!