வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (29/11/2017)

கடைசி தொடர்பு:09:10 (29/11/2017)

ஊழல் வழக்கில் கைதான சவுதி இளவரசர் விடுதலை

ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட 11 இளவரசர்களில் ஒருவரான மிதெப் அப்துல்லா மட்டும் தற்போது விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

சவுதி இளவரசர்

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான், சில நாள்களுக்கு முன் பட்டத்து இளவரசராகப் பொறுப்பேற்றார். சவுதியில் அரச குடும்பத்தில் உள்ள பலர் ஊழலில் ஈடுபட்டு வருவதாக சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, சவுதியில் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் முகம்மது பின் சல்மான் இறங்கினார். அதன் தொடக்கமாக, இவர் தலைமையில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்ட சில மணி நேரங்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டனர்.  மூன்று அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் என 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சவுதியின் பெரும் பணக்காரரான அல் வலீத் பின் தலாலும் இளவரசர் குறியில் இருந்து தப்பவில்லை.

இந்நிலையில், பெரும் தொகை ஒன்றை அரசுக்கு செலுத்துவதாக ஒப்புக்கொண்டதால், கைதான 11 இளவரசர்களில் ஒருவரான மிதெப் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளதாக, அரேபியச் செய்தி வட்டாரங்கள் செய்திகள் வெளியிட்டுவருகின்றன.