வலையில் சிக்கிய பாம்புகள்...! மீனவர்கள் அதிர்ச்சி

மீனுக்காக வீசிய வலையில் ஏராளமான கடல்பாம்புகள் சிக்கியதைப் பார்த்த மீனவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

பாம்புகள்

 

இலங்கை மட்டக்களப்பு  மாவட்டத்தின், நாவலடியில் இன்று காலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள்  பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகின்றது. அண்மைக் காலமாக, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாது, சிரமத்திற்கு இடையே தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று  மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களுக்கு, மீன்களுக்கு பதில் வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும்  தந்துள்ளது. இதனால்  நாட்டில்  காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளதோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று கடந்த  2004-ம் ஆண்டு சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் அதிக அளவிலான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால், தற்போது சுனாமி அச்சமும் மக்கள் மத்தியில்  ஏற்பட்டுள்ளது.
 பெரும் எண்ணிக்கையிலான  பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மட்டக்கிளப்பு பகுதி மீனவர்கள் கோரியுள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!