பிரிட்டன் பிரதமரைக் கொலை செய்ய சதித்திட்டம்: இருவர் கைது

பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொல்ல சதித்திட்டம் தீட்டி முயன்றதாக இரண்டு பேர் லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெரசா மே

பிரிட்டன் பிரதமர் தெரசா மே லண்டனில் எண் 10, ட்வுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் வசித்து வருகிறார். இவரது இல்லத்துக்கு அருகே சந்தேகத்துக்குரிய இருவர் நடமாடியதாகவும் அவர்கள் பிரதமருக்கு அச்சுறுத்தல் தரலாம் என்ற சந்தேகத்தின் பெயரிலும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், லண்டன் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை சந்தேகத்துக்குரிய அந்த இரண்டு நபர்களும் கொல்ல சதித்திட்டம் தீட்டியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஸகாரியா ரெஹ்மான், அகியூப் இம்ரான் ஆகிய இருவரும் நேற்று லண்டன் போலீஸாரால் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் மீது பிரதமரைக் கொலை செய்ய சதி செய்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும், இந்த 2017-ம் ஆண்டில் மட்டும் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக நடத்தப்படவிருந்த 9 தீவிரவாதத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!