ஒரேபாலினத் திருமணத்துக்கு ஆஸ்திரேலியா அனுமதி | same sex marriage is legal hereafter at australia

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (07/12/2017)

கடைசி தொடர்பு:16:31 (07/12/2017)

ஒரேபாலினத் திருமணத்துக்கு ஆஸ்திரேலியா அனுமதி

ஒரேபாலினத் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்த 26-ம் நாடாகப் பட்டியலில் இணைந்துள்ளது ஆஸ்திரேலியா.

lgbt

ஒரே பாலினத்தைச் சேரந்தவர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்வதற்கு சர்வதேச அளவில் பல நாடுகளும் அனுமதிப்பதில்லை. ஆனால், சில நாடுகள் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களைச் சட்டரீதியாக அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டு அவர்களது திருமணத்தையும் சட்ட ரீதியாக அனுமதிக்கிறது.

இந்த வகையில் ஆஸ்திரேலியா ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ சட்ட மசோதா ஆஸ்திரேலியா நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் சமீபத்தில் இறுதி வாதம் நிகழ்ந்தது. கீழ் சபையில் முன்னரே நிறைவேறிய சட்டத்தை மேல் சபையும் ஏற்பதாக ஒப்புதல் அளித்துள்ளது. ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் 150 உறுப்பினர்களில் 145 பேரின் அனுமதியுடன் இச்சட்டம் ஒப்புதல் பெறப்பட்டது.

இந்தப் புதிய சட்ட மசோதாவால் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பைப் பிரதமர் டர்ன்புல் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.