நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்! | Earthquake of magnitude 5.0 strikes Nepal

வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (08/12/2017)

கடைசி தொடர்பு:10:22 (08/12/2017)

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்!

நேபாளத்தில், இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 


நேபாளத்தின் தோலகா பகுதியை மையமாகக்கொண்டு, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5-ஆகப் பதிவானது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இன்று காலை 8.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும், பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதன் பாதிப்பிலிருந்து நேபாளம் மெள்ள மீண்டுவரும் நிலையில், தற்போது மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ஜம்மு-காஷ்மீர் - சீனாவின் ஜிங்ஜியான் பகுதியை மையமாகக்கொண்டு, நேற்று அதிகாலை 4.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆகப் பதிவானது. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் மையப்புள்ளி, இந்திய-சீன எல்லைப் பகுதியில் உள்ள லடாக் பகுதி என்று தெரிவிக்கப்பட்டது.