வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (18/12/2017)

கடைசி தொடர்பு:17:45 (18/12/2017)

``பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவோம்”: வடகொரிய அதிபர் சூளுரை

``பாதுகாப்புத்துறையில் வடகொரியா தன்னிறைவு பெறும்” என தன் தந்தையின் நினைவு நாளில் சபதம் எடுத்துள்ளார் வடகொரியா அதிபர் கிம்.

கிம்

20-ம் நூற்றாண்டின் இறுதியில் வடகொரியாவைத் தொடர்ந்து ஆண்டு வந்தவர் வடகொரியாவின் முன்னாள் அதிபரும் இந்நாள் அதிபரின் தந்தையுமான கிம் ஜாங் இல். இவரது ஆறாவது நினைவு தினம் வடகொரியாவில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடகொரியாவின் முன்னேற்றத்துக்காகத் தற்போதைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சபதம் எடுத்துள்ளார்.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசினார்.

இந்நிலையில், தன் தந்தையின் நினைவு நாளில் அதிபர் கிம், “பாதுகாப்புத்துறையில் வடகொரியா தன்னிறைவு பெறும். அதுவரையில் நான் ஓய்வின்றி செயல்படுவென்” எனச் சபதம் ஏற்றுள்ளார்.