கார் லேசாக உரசியதால் வயதான டிரைவரை சரமாரியாக தாக்கியப் பெண்!

சமீபத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டின் க்யூஸன் நகரில், வயதில் மூத்த டாக்ஸி ஓட்டுநரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ வைரலானது. அந்தப் பெண்ணின் செய்கையை நெட்டிசன்கள் கடுமையாக  விமர்சித்தனர். 

taxi driver slapped by woman
 

பாதிக்கப்பட்ட க்யூஸன் நகரைச் சேர்ந்த 52 வயது டாக்ஸி ஓட்டுநர் வெர்ஜிலோ, தன்னை தாக்கிய பெண்மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அவரைத் தாக்கியது, பெண் தொழிலதிபர்  செரிஷ் ஷர்மைன் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று, டாக்ஸி ஓட்டுநர் வெர்ஜிலோ, காரை ஓரம் கட்டியபோது ஷர்மைனின் காரில் லேசாக மோதியுள்ளது.  அதனால் ஆத்திரமடைந்த ஷர்மைன், காரைவிட்டு இறங்கி டாக்ஸி ஓட்டுநரைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். காரைவிட்டு கீழே இறங்குமாறு மிரட்டியுள்ளார். காரின் கண்ணாடியை உடைத்து, காரின் உள்ளே அமர்ந்திருந்த ஓட்டுநரைத் தாக்கியுள்ளார். 

 

 

ஷர்மைன் தாக்கியதால் காயமடைந்த ஓட்டுநர் வெர்ஜில், சாலையோரத்தில் கண்கலங்கியபடி வந்து அமர்ந்துகொண்டார். அவரை போட்டோ எடுத்துவிட்டு மீண்டும் திட்டிவிட்டுச் செல்கிறார் ஷர்மைன். இந்தக் காட்சியை அருகிலிருந்த ஒருவர் வீடியோ எடுத்துப் பகிர, நெட்டிஸன்கள் கோபத்தில் கொந்தளித்துவருகின்றனர். வெர்ஜிலின் புகாரைத் தொடர்ந்து, ஷர்மைன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது க்யூஸன் போலீஸ். இதனிடையே, வயதில் மூத்தவரை தாக்கியதுக்கு மன்னிப்புக் கோரி, ஷர்மைன் முகநூலில் பதிவிட்டிருக்கிறார். “நான் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை. நான் யார் என்பது என் குடும்பத்தினருக்குத் தெரியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!