வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (22/12/2017)

கடைசி தொடர்பு:15:40 (22/12/2017)

பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளர்: தம்பியை முன்னிறுத்தினார் நவாஸ்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தானின் பிரதமர் வேட்பாளராக தன் தம்பி ஷெபாப் நவாஸை முன்னிறுத்தியுள்ளார் நவாஸ் ஷெரிஃப்.

நவாஸ்

பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தானில் வலுவாக கோரிக்கை எழுந்தபிறகு தனது பிரதமர் பதவியை இழந்தார் நவாஸ் ஷெரிஃப். இந்நிலையில், பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஷாகித் ககான் அப்பாஸி நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் அரசியலில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம், சுதந்திரம் அடைந்தது முதல் இப்போதுவரை எந்தப் பிரதமரும் தங்களது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பதுதான்.

இந்த வகையில் வருகிற 2018-ம் ஆண்டு பாகிஸ்தானின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாகிஸ்தானின் பிரதமர் வேட்பாளராக நவாஸ் ஷெரிஃப் தன் தம்பி ஷெபாப் நவாஸை முன்னிறுத்தியுள்ளார். முன்னதாக நவாஸ் ஷெரிஃப் பதவி இழந்ததால் காலியாக இருந்த லாகூர் பாராளுமன்ற இடைத் தேர்தலில் தனது மனைவி மரியம் நவாஸை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார்.