வரலாறு பேசும் அரிய புகைப்படத்தை விட்டுச் சென்ற விண்வெளி வீரர்!

மந்தாரமான கறுப்பு நிற திரை... கீழே பிரகாசமாக படர்ந்திருக்கும்  நீல நிறம். குட்டியாகத் தெரியும் பொம்மை போன்ற உருவம்.. ஏதோ கிராபிக்ஸ் காட்சி போன்று தோன்றலாம். ஆனால் இது விண்வெளியில் பதிவான உண்மை காட்சி. கீழே படர்ந்திருக்கும் நீல நிறம்தான் நாம் வாழும் பூமி. கறுப்பு திரை விண்வெளி. குட்டி பொம்மை போன்று மிதந்து கொண்டிருப்பவர் விண்வெளி வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் (Bruce McCandless).  


 

இந்தப் புகைப்படம் 1984ம் ஆண்டு பதிவானது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக (untethered with nothing) விண்வெளியில் வலம் வந்த முதல் வீரர் என்னும் பெருமைபெற்றவர் புரூஸ் மெக்கண்டில்ஸ். இவர் தனது 80 வயதில் கடந்த 21ம் தேதி காலமானார். அவரை பெருமைப்படுத்தும் விதமான அவரின் சாதனை நிமிடங்களை நாசா வெளியிட்டு வருகிறது. அவரின் இந்தப் புகைப்படம் விண்வெளி வரலாற்றுப் பக்கங்களில் சிறந்த பக்கமாக விளங்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளது நாசா! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!