வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (24/12/2017)

கடைசி தொடர்பு:15:10 (24/12/2017)

பிலிப்பைன்ஸ் நாட்டைப் புரட்டி எடுக்கும் ‘டெம்பின்’ புயல்!

பிலிப்பைன்ஸ் நாட்டைப் புரட்டி எடுத்து வரும் ‘டெம்பின்’ புயலுக்கு இதுவரையில் சுமார் 180 பேர் வரையில் பலியாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

டெம்பின் புயல்

சுனாமி, வெள்ளப்பெருக்கு, புயல், சூறாவளி என இயற்கைப் பேரிடர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை வதைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. இந்த சூழலில் இரண்டு நாள்களுக்கு முன்னர் கடுமையான புயல் ஒன்று பிலிப்பைன்ஸ் நகரில் மையம் கொண்டது. இப்புயல் தற்போது வலுப்பெற்று அந்நாட்டையே புரட்டி எடுத்துவிட்டது. இப்புயலுக்கு தற்போது ‘டெம்பின்’ எனப் பெயர் சூட்டியுள்ளன. இப்புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மிண்டானோ நகரின் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த புயலினால் டெல் நார்ட்டே மாகாணத்திலும் மிண்டானோவா மாகாணத்திலும் சுமார் 180 பேர் பலியாகி இருக்கலாம் என்றும் சுமார் 100 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அநாட்டின் பாதுகாப்புப் படையினர் முதற்கட்ட அறிக்கையை அளித்துள்ளனர். மேலும் அநாட்டின் பாதுகாப்புப் படையினரும் ராணுவத்தினரும் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே வாரத்தில் இரண்டு கடும் புயல்கள் தாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.