சிட்னி ஆற்றில் மூழ்கிய கடல் விமானம்! 6 பேர் உயிரிழந்த சோகம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஆற்றில் கடல் விமானம் மூழ்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். 


உலகின் மிகப்பெரிய கேட்டரிங் நிறுவனமாகக் கருதப்படும் காம்பஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, ரிச்சர்டு கசின்ஸ். இங்கிலாந்தைச் சேர்ந்த அவர், தனது குடும்பத்தினருடன் புத்தாண்டைக் கொண்டாட ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்துள்ளார். சிட்னி நகர ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்றில் குடும்பத்தினருடன் உணவருந்திவிட்டு, கடல் விமானம்மூலம் அவர் பயணித்துள்ளார். விபத்தில் சிக்கிய அந்த விமானம், ஆற்றில் மூழ்கியது. இதில், அந்த விமானத்தில் பயணித்த ரிச்சர்டு கசின்ஸ் மற்றும் அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் 11 வயது மகள் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், அந்த விமானத்தை இயக்கிய ஆஸ்திரேலிய விமானி கேரெத் மோர்கனும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம்குறித்து தகவலறிந்த சிட்னி நகர போலீஸார், ரிச்சர்டு மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம்குறித்து சிட்னி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!