உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி! - பனிக்குவியல் பிரதேசத்தைக் காணத் திரளும் மக்கள் 

உலகின் எழில் கொஞ்சும் பேரருவிகளில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி, கடந்த சில தினங்களாக பனியில் உறைந்துள்ளது.

niagara

நயாகரா நீர்வீழ்ச்சி, வடஅமெரிக்கக் கண்டத்தில் உள்ள  கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கிற்கும் இடையே அமைந்துள்ளது.

niagara

கடந்த சில தினங்களாக, வட அமெரிக்காவில் கடும் குளிர் நிலவிவருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, அதிகபட்சமாக மவுண்ட் வாஷிங்டனில் மைனஸ் 34 டிகிரி குளிர் நிலவுகிறது. இதனால், சுமார் 220 மில்லியன் வட அமெரிக்க மக்கள் கடுமையான குளிரில் புத்தாண்டை வரவேற்றனர். பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தாலும், நயாகராவின் அழகைக் கண்டுகளிக்க சுற்றுலாவாசிகள் அங்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.

niagara

 

பிரகாசமான பனிக் குவியல்கள், வெண்மை போர்த்திய மரங்கள் என 'நார்னியா' படத்தில் வரும் பனி தேசம்போல காட்சியளிக்கிறது நயாகரா அருவி.
  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!