இது ட்ரம்ப்பின் குபீர் புத்தாண்டு வாழ்த்து! | Trump's unique new year wishes

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (01/01/2018)

கடைசி தொடர்பு:16:20 (01/01/2018)

இது ட்ரம்ப்பின் குபீர் புத்தாண்டு வாழ்த்து!

2018-ம் ஆண்டு பிறந்ததையடுத்து, உலகத் தலைவர்கள் அவர்களது ஸ்டைலில் வாழ்த்துகள் கூறிவருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குபீர் புத்தாண்டு வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ட்ரம்ப்

வாழ்த்துச் செய்தியில், `நம் நாடு மிக வேகமாகவும் சிறந்ததாகவும் வளர்ந்துவருகிறது. இந்த நேரத்தில் எனது நண்பர்கள், ஆதரவாளர்கள், எதிரிகள், என்னை வெறுப்பவர்கள், மற்றும் மிக நேர்மையற்ற `ஃபேக் மீடியாவுக்கும்' மகிழ்ச்சியான மற்றும்  ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துகள். 2018-ம் ஆண்டு, அமெரிக்காவுக்கு மிகச் சிறந்த வருடமாக இருக்கும். அமெரிக்காவை மீண்டும் நாம் கிரேட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். யாரும் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக நாம் கிரேட்டாக மாறிக்கொண்டிருக்கிறோம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்' என்று ஊடகங்களைச் சாடி வாழ்த்துக் கூறியுள்ளார்.