துப்புரவுத்தொழில் செய்யும் இந்தியரின் நேர்மையைப் பார்த்து வியந்த துபாய் போலீஸ்!

துபாயில் பணிபுரியும் இந்தியர் வினகதர் அமானாவின் நேர்மையைப் பாராட்டி, துபாய் போலீஸார் பரிசு கொடுத்துள்ளனர். கடுமையான சட்டதிட்டங்களைக்கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரான துபாய், நேர்மையானவர்களைப் பாராட்டவும் தவறுவதில்லை.

துபாய்
 

துபாயின் அல் குவைஸ் என்னும் பகுதியில் துப்புரவுத் தொழில் செய்துவருபவர், இந்தியர்  வினகதர் அமானா.  இவர், துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பை தென்பட்டிருக்கிறது. பையைத் திறந்துபார்த்தபோது, அதில் நகைகள் இருந்துள்ளன. சற்றும் தாமதிக்காமல், நகைப் பையை அருகில் இருந்த அல் குவைஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் வினகதர். துபாய் போலீஸ் பையை சோதனை செய்ததில் 200,000 dirham மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளன. வினகதரின் நேர்மையைப் பாராட்டி, துபாய் போலீஸார் அவருக்கு பரிசுப் பொருள்களையும் சான்றிதழையும் வழங்கியுள்ளனர். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!