ட்ரம்ப் ட்வீட் எதிரொலி! - அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

trump
 

இதுகுறித்து ட்ரம்ப் தெரிவித்திருப்பதாவது ”பாகிஸ்தானுக்கு தேவையில்லாமல் கடந்த 15 ஆண்டுகளில் 33 பில்லியன் டாலர்கள் நிதியளித்தது முட்டாள்தனமானது என்று வருந்துகிறேன். நாங்கள் ஆப்கானிஸ்தானில் தேடும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல உதவிகள் செய்து வருகிறது. ஆனாலும் அமெரிக்காவை பாகிஸ்தான் வஞ்சிக்கிறது. அமெரிக்க தலைவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கின்றனர். இனிமேல் பாகிஸ்தானுக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் இவ்வாறு ட்விட்டரில் குறிப்பிட்டதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதருக்கு  பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது. ட்ரம்ப் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!