சீனாவுக்கு முதன்முறையாகப் பயணம் செய்யப்போகும் பிரான்ஸ் அதிபர் மேக்ரன்..!

கடந்த ஆண்டு மே மாதம் பிரான்ஸின் அதிபராக பதவியேற்ற இமானுவேல் மேக்ரன், முதன்முறையாக சீனாவுக்கு அரசுமுறைப்  பயணம் மேற்கொள்ள உள்ளார். 

பிரான்ஸ் அதிபர்

இந்தச் சந்திப்பில், சிரியாவில் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்-க்கு எதிராக உலக நாடுகள் எடுத்துவரும் தீவர நடவடிக்கை மற்றும் வடகொரியாவின் அபரிமிதமான அணு ஆயுதப் பயன்பாடுகுறித்து, சீன அதிபர் ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மேக்ரன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேக்ரன், `சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக நடக்கும் போர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிவுக்கு வரும்' என்று முன்னர் நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உலக நாடுகளுடன் மோதல் போக்குடன் நடந்துகொண்டிருக்கும் வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலும் மேக்ரன் சீனாவுடன் ஆலோசிப்பார் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேக்ரன் - ஜின்பிங் இடையிலான சந்திப்பு, இம்மாதம் ஜனவரி 8 முதல் 10- ம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!